கொரோனா பரிதாபம் – 70 ஆண்டு பாரம்பரிய நிறுவனம் `விட்கோ’ மூடல்..!!

இந்தியாவின் மிகப்பெரிய bag சாம்ராஜ்யமான விட்கோ நிறுவனம் தங்களது ரீட்டெயில் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

1950 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் டிரேடிங் கோ என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னாளில் விட்கோவாக மாறியது.

ஸ்கூல் பேக்ஸ், ட்ராலி, சூட்கேஸ் உள்ளிட்ட ஏராளமான லக்கேஜ் பைகளை விற்பனை செய்துவந்த விட்கோ, 1990 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஷோ ரூம்களை தொடங்கியது.

இந்நிலையில் 70 ஆண்டுகளாக bag விற்பனையில் கோலாச்சி வந்த விட்கோ நிறுவனம், கடுமையான போட்டிகளாலும், கொரோனா பரவலால் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தாலும் தங்களது ரீட்டெயில் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே