இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, இந்தோனேசியா நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரொனா 2-வது அலை ஓய்ந்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் கொரோனாவுக்கு 546 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு 3.13 கோடி
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,20,016.
3.05 கோடி பேர் குணமடைந்தனர்
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 35,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,05,03,166.
42.78 கோடி தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,08,977. மேலும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,78,82,261 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.