ஊரடங்கு மீறல் அபராதமாக தமிழகத்தில் ரூ.10,44,74,254 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது!!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 2 வது இடத்தினைப் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் பலரும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறி, ஊரடங்கினை அலட்சியமாக எண்ணிப் பயணங்கள் மேற்கொண்டதே ஆகும். இவ்வாறு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செல்வோர்மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில், ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இதுவரை தமிழகத்தில் ரூ.10,44,74,254 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி பல லட்சக்கணக்கானவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

CoronaUpdate| CoronaFine

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே