உலக அளவில் 1.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரத்து 639 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது.

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,39,46,639 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,92,677-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து 82,77,741 போ குணமடைந்துள்ளதாகவும், 50,76,221போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 59,936 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,41,118 லட்சத்தைத் தாண்டியது.

தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே