உலக அளவில் 91 லட்சம் பேருக்கு கொரோனா, இம்மாத இறுதியில் 1 கோடியை தொட்டுவிடுமோ ??

சீனாவின் வுஹான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான சேதத்தை விளைவித்தது. இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை இம்மாத இறுதியில் ஒரு கோடியைத் தொடும் என்ற அபாயம் உள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்வு, குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்வு.

உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. அதிபர் டிரம்ப் கொரோனா சோதனையை அதிகரிக்கவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 23,88,153ஆக உயர்வு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,610ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கொரோனவால் ஏற்படும் மரணத்தை தடுக்க Fabiflu என்னும் மருந்து வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்ற இந்த fabiflu மருந்துகள் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மருந்து தங்குதடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் இந்த மாத இறுதியில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே