நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கை ஆளும் மத்திய மாநில அரசுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வரிகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் இந்த கருத்தை நீதிபதிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் நேர்மையையும் திறமையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் காரணமாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே