காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா அதிரடி பேச்சு

புதுச்சேரியில் அடுத்து பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைவது நிச்சயம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ” இங்கு காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிட்டது. அதன் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். ராகுல் காந்தியின் பேச்சை நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்தவர். உலகிலேயே நன்றாக பொய் பேசுபவருக்கான விருதை தருவதென்றால் அதை நாராயணசாமிக்கு தான் தர வேண்டும்”  என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே