காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி இரவு 7 மணியளவில் , டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா கூறியதாவது ; கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நலமுடன் உள்ளார் என்றார். முன்னதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்றார். 

3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே