”ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள்” – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேநேரத்தில் கமல்ஹாசன் ரஜினியை கூட்டணிக்கு அழைக்கிறார். மேலும் மூன்றாவது அணி அமையும் எனவும் கூறி வருகிறார்.

இந்நிலையில், நெல்லையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள்.

தேர்தல் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பாஜகவில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். 

அப்போது, நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பு அடையவும், விவசாயிகளின் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இதை பாஜக மட்டும் கூற வில்லை, 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இதே சட்டத்தை பற்றி கூறினார்கள்.

ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.

வேளான் சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

விவசாயிகளுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இந்த சட்டம் குறித்து விளக்கமளித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார்கள் என அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே