மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய காணொளி ஆலோசனை நிறைவு பெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (29/08/2020) காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது.

ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவு பெற்ற நிலையில், இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருத்துவருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்து, தமிழகத்தில் ஊரடங்கு, புதிய தளர்வுகள், இ- பாஸ் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே