விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக புகார் : இதுவரை 79 பேர் மீது வழக்குப் பதிவு..!!

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 79 வழக்குகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, போரூர், மாங்காடு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 79க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் வீதி வீதியாகச் சென்று வழக்குப்பதிவு செய்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் பட்டாசு வெடித்ததற்காக வழக்கா என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

எனினும் சுற்றுசூழல் பாதுகாப்பே முக்கியம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே