போலியோ வைரஸ் அவசரகால தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி..!!

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் போலியோ வைரஸ் தடுப்பு அவசர தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மனிதர்களின் கழிவுகள் மூலமாக பரவும் போலியோ வைரஸ் மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து கால் கைகளில் தசை வளர்ச்சியை பாதிக்கும்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ வைரஸ் உள்ளது.

பெரும்பாலான நாடுகளில் மூன்று வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படுவதால் இந்த வைரஸ் 99.5 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் முயற்சியால் அழிக்கப்பட்ட வைரஸ் பட்டியலில் போலியோ வைரஸும் ஒன்று.1988-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் போலியோ நோயாளிகள் இருந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெறும் 175 நோயாளிகளே போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டு பலர் குணம் அடைந்தனர். போலியோ நோயாளிகளின் கழிவுகள் உணவு பொருட்களின்மீது பட்டு அதனை வேறு ஒருவர் சாப்பிட்டால் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. போலியோ சோதனைக்கு பாதிக்கப்பட்டவரின் கழிவு சோதனைக்கு உள்ளாகும்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் பயோபார்மா பிடி மருந்து நிறுவனத்தின் போலியோ அவசர தடுப்பு மருந்து தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே