கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இல்லை என புகார்..!!

கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், தமிழ், கன்னடம்,மலையளம் போன்ற அனைத்து மாநில மொழிகளிலும், இந்த இணையதளம் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் இணையம் வாயிலாக தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே