இந்திய ராணுவத்தினர் யாரையும் சீனர்கள் சிறைபிடிக்கவில்லை…!!! மீண்டும் மழுப்பும் சீனா…!!!

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்; சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் வரை இறந்திருக்கலாம் என, செய்திகள் வெளியாகின. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதை சீனா மறுத்திருந்தது.
பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான்கு ராணுவ உயரதிகாரிகள் உட்பட, 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், ‘இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது, இந்திய ராணுவத்தினர் யாரையும் சீனர்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் சிறை பிடிக்காத போது, அவர்களை விடுவித்ததாகக் கூறுவது அபத்தமாகவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே