ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பது மற்றும் பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுமுடக்கத்தை நீட்டிப்பது, பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே