சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!!

தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

7 மண்டலங்கள், 92 வார்டுகள், 16,621 தெருக்களில் 8 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக 100% இ-ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

உலர் கழிவுகள், ஈரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என 3 விதமாக குப்பை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மூலம் குப்பை சேகரிப்பு பணி நடைபெற உள்ளது.

பண்டிகை காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் 24 மணிநேரமும் குப்பை சேகரிப்பு பணி நடைபெற உள்ளது.

குப்பை சேகரிக்கும் வாகனங்கள், குப்பை தொட்டிகள் ஆகியவை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே