வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று வர உள்ள நிலையில் ,சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.

4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே