அமைதியான போராட்டம் உலகில் எங்கு நடந்தாலும் கனடா ஆதரவளிக்கும் – கனடா பிரதமர் உறுதி..!! (VIDEO)

மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு கனடா பிரமர் ஜெஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் முடிவு எட்டப்படாத சூழலில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ, இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். அதற்கு மத்தி அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கனடா நாட்டுத் தூதருக்குச் சம்மன் அனுப்பியது. அதில், உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவித்தால், இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “உரிமைக்காக உலகின் எந்த மூலையில் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கும், மனித உரிமைக்கும் கனடா துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் கனடாவில் சீக்கியர்களின் வாக்குகளை அதிகம் பெற்றே வெற்றி பெற்றார். விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் அதிக அளவு கலந்து கொண்டுள்ளதால் ஆதரவு தெரிவித்துள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே