சென்னை : ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் க்கு தடை என்று சொல்ல இயலாது – சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னையில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடையில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பல்வேறு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த பிறகு நிருபர்களுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி அளித்தார்.

அப்போது, “பொது மக்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கத்தான் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அவர்களைக் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்துவது இல்லை.

சட்டத்தை மீறி ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவலர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

எனவே, சென்னை பெருநகரத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை.

சர்வதேச அளவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்” என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே