பிப். 22 முதல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணத்தை குறைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது 0 – 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 4 -6கிமீ வரை, 6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆகவும்,இருந்த நிலையில் இனி, 5 – 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 18 கிமீ வரை கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 -21 கிமீ வரை கட்டணம் ரூ.40 என வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

18 -24 கிமீ வரை கட்டணம் ரூ.60, 24 கிமீ மேல் கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 21 -32 கிமீ வரை கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே