#BREAKING : முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அம்மாவின் அரசு, கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. 

மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே