தென் தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.கீதா நேற்று கூறியதாவது:

கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7-ம் தேதி (இன்று) முதல் 10-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

6-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர்பரமத்தியில் 98 டிகிரி, சேலம், பாளையங்கோட்டை, மதுரையில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே