கொரோனா மருந்துப் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கம்..!!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காரணம் ரெம்டெசிவிர் மருந்தினால் கொரோனா பாதித்தவர்களின் உடல்நிலை முன்னேறம் கண்டதாகவோ, இறப்பு தடுக்கப்பட்டதாகவோ தரவு இல்லை என்றும், அதனால் கொரோனாவுக்கு கொடுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அந்த பட்டியலில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ரெம்டெசிவிர் குறைந்த அளவிலான நோயாளிகளுக்கு பலன் அளித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த முடிவில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

காரணம் கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை முன்கூட்டியே செலுத்தினால் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுவதாக தெரியவந்தது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்விலும் இப்படியான முடிவு வந்தது.

ஆனால் பெரும்பாலும் ரெம்டெசிவிர் பலனை தரவில்லை எனக்கூறி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே