தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரம் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே