ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு!

டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய உத்தரவிட்டது.

1997 பிப்ரவரியில் பிரியங்கா காந்திக்கு டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பங்களா ஒதுக்கப்பட்டது.

அவர் கடந்த 23 ஆண்டுகளாக அரசு பங்களாவில் தங்கியிருந்தார்.

சிஆர்பிஎஃப் கவர் மற்றும் எஸ்பிஜி பாதுகாப்புடன் ஒதுக்கப்பட்ட இசட் + பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எனவே, இசட் + பாதுகாப்பு இல்லாததால் இனி அரசாங்க வீட்டில் தங்க உரிமை இல்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், “இசட் + பாதுகாப்பு மட்டும் நபர்கள் அரசாங்க வீட்டில் தங்க உரிமை இல்லை.

எனினும் சிறப்பு நிகழ்வாக உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் சி.சி.ஏ’ஆல் இதில் விதிவிலக்குகள் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜூன் 30, 2020 நிலவரப்படி 3,46,677 ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்தாமல் வைத்துள்ளார் என்றும், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர் அதை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே