தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு பெறப்படும் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஜி.ராஜேஷ் என்கின்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனாவுக்கு சிகிச்சை கொடுக்க தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயித்ததுபோல் சிகிச்சைக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

