நடிகை வனிதா மீது வழக்குப்பதிவு

கரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

தற்போது வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக நடிகை வனிதா மீது அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரானா தொற்று 144 தடை காலத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திலும் அனுமதி பெறாமலும்; Association யிலும் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் 20 நபர்களுடன் சமூக இடைவேளி கடைபிடிக்காமல் Event Show என்ற பெயரில் நடிகை வனிதா அராஜகம் செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே