கடன் தவணையை வசூலிக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: RBI ஆளுநருக்கு நோட்டீஸ்…!!

ஆர்பிஐ உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கினால் வருமானமில்லாமல் தவிக்கும் நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்தக்கோரி வற்புறுத்துவதாகவும், தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை நிதி நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே