இந்தியாவிற்கான விமான போக்குவரத்தை முழுமையாக ரத்து செய்தது கனடா..!!

உலகிலேயே இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு உள்ளது.

நாள் ஒன்றுக்கு 3.32 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2263 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்தியாவுக்கு வர அச்சம் தெரிவித்து பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

அதன்படி, இந்தியா – துபாய் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது .

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் வர கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியா – பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை முதல் ( 24.04.21) முதல் 30ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்களும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 3ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாது.

முன்னதாக அமெரிக்கா அவர்களது நாட்டு மக்களை இந்தியா செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தியாவில் வைரஸ் பரவத் தொடங்கிய போதே நியூசிலாந்து அரசு விமான சேவையை ரத்து செய்துவிட்டது.

பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியா, ஓமன் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே