குழந்தைகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால், குழந்தைகளிடம் இருந்து அதிகம் கொரோனா வைரஸ் பரவ வாய்புகள் இல்லை.

கொரோனா வைரஸ் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து அச்சுறுத்தி கொண்டே வருகிறது. குழந்தைகளிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு உள்ளது? அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? போன்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ளது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு கூட கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டுமா? என வினவுகிறார்கள். இந்த கேள்விகளுக்கு குழந்தைகளுக்கான தொற்றுநோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் வூட் என்ன கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு தேவையா?

கொரோனா தடுப்பூசி குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்றால் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இளம் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என கூறும் ஆய்வாளர்கள், அதற்காக அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்ற அர்த்தமல்ல என கூறுகின்றனர். பொதுவாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்படுவதில்லை. பதின்ம வயதினருக்கு அதிகளவு பாதிப்பு உள்ளதை அதிகம் பார்க்க முடிகிறது.

குழந்தைகளுக்கும் பதின்ம வயதினர் அல்லது இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராயும்போது, அவர்கள் அதிக அளவிலான சமூக நடமாட்டத்தை கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதேவேளையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 226 குழந்தைகள் அமெரிக்காவில் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். அவர்களும் சமூகவிலகல் மற்றும் முக க்கவசங்களை அணிவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகள் வைரஸைப் பரப்புகிறார்களா?

பள்ளிகளில் சமூகவிலகல் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால், குழந்தைகளிடம் இருந்து அதிகம் கொரோனா வைரஸ் பரவ வாய்புகள் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபடாத சமயத்தில் குழந்தைகளிடம் இருந்து பெரியவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை குழந்தைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?

தற்போது கூட குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பைசர் தடுப்பூசி தற்போது வரை சோதனை அளவில் மட்டுமே உள்ளது. ஆயிரக்கணக்கான தன்னார்வ குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாடர்னா மற்றும் பைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் குழந்தைகளுக்காக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் அல்லது மே மாத இறுதிக்குள் இந்த சோதனைகளின் முழு விவரமும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இதில் நல்ல ரிசல்ட் கிடைத்தால் ஜூன் மாதங்களில் பள்ளி தொடங்கும் சமயத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முழுவீச்சில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

தடுப்பூசிகளின் வேறுபாடு

குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் பெரியவர்களுக்கான தடுப்பூசி ஆகிய இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் ஆன்டிபாடிகளின் அளவு. பெரியவர்களுக்கு கொடுக்கும் அளவு குறைத்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. ஆனால், எந்த அளவு பயன்படுத்தினால் சரியான முடிவுகள் கிடைக்கின்றன என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரியவர்களுக்கு 100 மைக்ரோகிராம் ஆன்டிபாடிகள் பயன்படுத்தும்போது, குழந்தைகளுக்கு அதில் எந்த அளவை பயன்படுத்தலாம் என மாடர்னா நிறுவனம் பரிசோதனை நடத்துகிறது. ஒரே அளவை முறையாக நிர்ணயித்த பின்னர், சில குழந்தைகளுக்கு பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டு அதன் விளைவுகளை கண்காணிக்க உள்ளனர், விளைவுகளின் அடிப்படையில் தடுப்பூசி முழுமையாக தயாராகும்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

கொரோனா தொற்று இருப்பதற்காக குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்து அடைப்பது சரியானதல்ல. விளையாட்டு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என்பது குழந்தை பருவத்தினருக்கு மிக மிக அவசியமான ஒன்று என்பதால், அவர்களை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்க வேண்டும். ஆனால், முறையாக பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் இருசக்கர வாகனங்களில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளுங்கள். தொற்றுநோயுடன், கோடை வெப்பமும் சேர்ந்திருப்பதால் அவர்களை வீட்டிலேயே முடக்குவது மனநிலை ஆரோக்கியம் பாதிக்கப்படும். இயல்பு நிலை திரும்பும் வரை குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பொதுவெளியில் அழைத்துச் செல்வது தவறில்லை. இவ்வாறு குழந்தைகள் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க மருத்துவரான டாக்டர் ஜேம்ஸ் வூட் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே