வங்க கடலில் புரெவி புயல்…; தென் மாவட்டங்களில் அதி கனமழை..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களையும் தொடர்பு கொண்டு கரைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

புயல் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் மற்றும் 8 கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே