உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்.

பிரபலமான பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டது.

எஸ்.பி.பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1.04 மணிக்கு உயிர் பிரிந்ததாக மகன் சரண் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே