#BREAKING : நாடு முழுவதும் ரயில் போக்குவரத்துக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை தடை!

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்துக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை தடை;

தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்! – ரயில்வே வாரியம் அறிவிப்பு

பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முதல் பொது முடக்கம் அமலானதிலிருந்தே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பொது முடக்கம்போதும் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே