தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை (23/03/2020) காலை வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க , மக்கள் ஊரடங்கிற்கு காலை 7 மணி முதல் , இரவு 9 மணி வரை ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் , இந்த உத்தரவு இன்று இரவு 9 மணியுடன் முடிகிறது.

இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

  • பொது மக்களின் நலன் கருதி நாளை காலை 05.00 மணி வரை ஊரடங்கு தொடரும்.
  • அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. 
  • தொடர் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே