#BREAKING : 3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு – AICTE

எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்சிஏ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

அதேபோல் இளநிலை படிப்பை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதாலும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாடுகள் என்ற எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வம் பெருமளவில் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

இதை தவிர்க்கும் வகையிலும் எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் ஏஐசிடிஇ புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது.

UGC-ன் 545-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து 3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைத்து AICTE அறிவித்துள்ளது.

B.Sc., BCA, B.Com., உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சியானவர்கள் நேரடியாக சேரலாம்.

கடந்த ஆண்டில் MCA படிப்பில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது.

பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலையடுத்து புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு 2020-21 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ.ஜி.சி படிப்பில் 50% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்தினர் 45% மதிப்பெண் எடுத்திருக்கலாம். பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே