ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் முடிவு செய்திருப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டணியில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது என்று முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்தது மூன்று மாத காலத்துக்குள் ரூ.2,12,809 கோடி நிதி திரட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.