#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 26) 6,986 பேருக்கு கொரோனா; 85 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 6,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,156 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 85 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று மேலும் 5471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே