#BREAKING : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உடல்நிலை சீராக உள்ளது.”

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே