#BREAKING : தமிழகத்தில் (ஜூலை 05) இன்று 4,150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; 60 பேர் பலி

தமிழகத்தில் மேலும் புதிதாக 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,11,151 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 60 பேர் பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் இரண்டாவது நாளாக பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே