மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 2ஆம் தேதியும்,
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 9ஆம் தேதியும் முடிவடைகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையையும் அவர் வெளியிட்டார்.

இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை
  • அதன்படி, வேட்புமனு தாக்கல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.
  • வேட்புமனுத் தாக்கலுக்கு அக்டோபர் 4ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
  • அக்டோபர் 5ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
  • அக்டோபர் 7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்.
  • அக்டோபர் 21ஆம் தேதி, மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
  • 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் 1.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிராவில் 8.94 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் பிரச்சாரங்களின்போது பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளை கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே