BREAKING : விக்கிரவாண்டி,நாங்குநேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதிக்கு ரெட்டியார்பட்டி நாராயணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்தமிழ்ச் செல்வன் விழுப்புரம் வடக்கு மாவட்டம், காணை ஒன்றிய செயலாளராக உள்ளார்.

நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.

விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் தற்போது வரை அறிவிக்கவில்லை.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே