நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார்.
தருமபுரி மருத்துவக் கல்லூரியில் போலி ஆவணங்கள் கொடுத்து சேர்ந்த மாணவர் முகமது இர்பான், கடந்த 3 நாட்களாக தேனீ சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
மொரிசியஸ் நாட்டிற்கு இர்பான் தப்பிச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்த நிலையில் முகமது இர்பான் அவரது வழக்கறிஞர் மூலம் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் சேலம் நீதிமன்றம் நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜரானார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். இன்று பிற்பகலில் இதன் மீது விசாரணை நடக்கும் என தெரிகிறது.
இர்பான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அறிந்த, சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்திற்கு வந்து கண்காணித்து வருகிறார்கள்.