மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளனர்.

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் இடைக்கால நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு தர வழக்கு தொடரப்பட்டது.

இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே