துணை குடியரசுத் தலைவர் வெங்கையாவின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்..!!

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. இவருக்கு, தனிப்பட்ட ட்விட்டர் கணக்கும் அலுவலக ரீதியிலான ட்விட்டர் கணக்கும் இருக்கின்றன.

இந்த இரண்டு கணக்கும் வெரிஃபைடு செய்யப்பட்ட ப்ளூ டிக் கொண்ட கணக்காக இருந்தது.

இந்நிலையில், அவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இது, இந்திய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே