ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி கூறுகையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி உணவு தேர்வுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
இருப்பினும், ஆண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. ஏனென்றால், அது அவர்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.
1. சோயா உணவுகள்
சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாஸ்டனில் உள்ள விந்தணு குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று வரும் 99 ஆண்களின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
2. டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats)
டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என 2011 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Processed Meats)
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதே ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை
4. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (BPA)
பூச்சிக்கொல்லிகளை நாம் நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நல்ல விளைச்சல் கொடுக்க பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. அதோடு, பேக்கேஜிங் மற்றும் கேன்களில் உள்ள உணவுகளில் பிபிஏ மற்றும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் இரண்டும் ஜீனோஎஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன. Xenoestrogens என்பவை ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படும் இரசாயனம். சோயாவில் உள்ள பைட்டோ எஸ்ட்ரோஜன்களைப் போலவே, ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், காயக்றி, பழங்களை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது பொதுவாக எல்லோருக்குமே நல்லது.
5. அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள்
அதிக கொழுப்பு பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதும் விந்தணுக்களை குறைக்கும். Rochester Young Men நடத்திய ஆய்வில், 18-22 வயதுக்குட்பட்ட 189 ஆண்கள் மீது விந்துணவுக்களின் அளவு மற்றும் உணவிற்கு இடையிலான தொடர்பு பற்றி பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் (கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ்) ஆகியவை காரணமாக விந்தணு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.
பொதுவாக, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனக் கூறுவது போல், எதையும் அதிகமாக உட்கொள்வது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த உணவு தேர்வுகளை செய்யுங்கள்.