தேர்தலில் போட்டியிடவில்லை – நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு..!!

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு சீமான் பரிசீலிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மன்சூர் அலிகான் விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். 

இதைத்தொடர்ந்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே