பாஜக ஒரு ஏமாற்றுக் கட்சி – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்..!!

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அக்கட்சி அரசியலுக்கான எதையும் செய்யக்கூடியது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, விவசாயி வீட்டிலும் நேற்று ஒரு பாடகர் வீட்டிலும் தனது கட்சிக்காரர்களுடன் உணவு சாப்பிட்டார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானது.

எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென தீவிரவாகச் சிந்தித்துவரும் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அக்கட்சி அரசியலுக்கான எதையும் செய்யக்கூடியது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மோடி தலைமையிலான பாஜக அரசு, என்.ஆர்.சி எனப்படும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இதுவரை 19 லட்சம் வங்காளிகளின் பெயரை நீக்கியுள்ளது.

எனவே பாஜகவை விட பெரிய திருடர்கள் எவருமில்லை என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டில் என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும்பெரும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே