போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கடிதம்..!!

போனில் அடையாளம் தெரியாத நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆகவே தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழக பாஜக துணை தலைவர் விபி துரைசாமி காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விபி துரைசாமி டிஜிபிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், “திமுகவில் துணைப்பொதுச் செயலாளராக பதவியில் இருந்த நான் கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்தேன்.

நான் தற்போது பாஜகவில் துணைத்தலைவராக உள்ளேன்.

பாஜகவில் சேர்ந்து 4 மாதங்கள் ஆன நிலையில் என்னை அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

ஆகவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய விபி துரைசாமி, கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர், தரையில் உட்கார வைத்தது கண்டனத்திற்குரியது.

இதற்கு தமிழக அரசு நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை தேவை.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுகொண்டுள்ளோம். கூட்டணிகள் தமிழகத்தில் மாற வாய்ப்பு குறைவு தான்” என பேசியிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே