3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள எஞ்சிய 3 பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே