மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..!!

மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 36.02% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 135 தொகுதிகளுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் 45 தொகுதிகளுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு ஜல்பைகுரி,டார்ஜிலிங், நார்த் 24 பர்கனஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இங்கு மொத்தம் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், அவர்களில் 39 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்.
இந்த தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் 42 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களிலும் மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகிறார்கள். பாஜக நேரடியாக 45 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.

மேற்குவங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் நடந்த கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 48 மணிநேரத்துக்குப் பதிலான 72 மணிநேர பொது அமைதி அமல்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே